
மான்செஸ்டர் டெஸ்ட்டில் விளையாடும்போது இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலின் பேட் உடைந்த விடியோ வைரலாகி வருகிறது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழக்காமல் 78 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் டிபெண்ட் செய்து ஆடும்போது பேட்டின் ஹாண்டில் பகுதி உடைந்தது.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் இதனை பிரேக்கிங் பேட் (Breaking Bat) என வர்ணித்துள்ளது.
இணையத் தொடர்களில் பிரேக்கிங் பேட் (Breaking Bad) மிகவும் பிரபலமானது. இதை ஒப்பிட்டு பகிர்ந்த புகைப்படம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 40 ரன்கள், ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.