குல்தீப் யாதவுடன் வன்ஷிகா..
குல்தீப் யாதவுடன் வன்ஷிகா..

சிறுவயது தோழியைக் கரம்பிடிக்கிறார் குல்தீப் யாதவ்!

சிறுவயது காதலியைக் கரம்பிடிக்கும் குல்தீப் யாதவைப் பற்றி...
Published on

இந்திய கிரிக்கெட் அணி வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது காதலியைக் கரம்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளரும், தில்லி அணியின் வீரருமான குல்தீப் யாதவ், தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள தனியார் ஹோட்டலில் நிச்சயர்தார்த்தம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

லக்னௌவில் உள்ள ஷ்யாம் நகரைச் சேர்ந்தவரான வன்ஷிகா, எல்ஐசியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவதிலிருந்தே நண்பர்களான இருவரும், காதலர்களாகி தற்போது மண வாழ்க்கையில் இணைய இருக்கின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான குல்தீப் யாதவ் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் குல்தீப் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தக் லைஃப் மேக்கிங் விடியோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com