இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்ப்பு!

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்த்தது குறித்து...
Woakes to mark his comeback in England.
கிறிஸ் ஓக்ஸ் படம்: பிடிஐ
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

வேகப் பந்து வீச்சாளரான கிறிஸ் ஓக்ஸ் (36) 57 டெஸ்ட் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பௌலிங் ஆல்ரவுண்டரான இவர் 1,970 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 2018 தொடரில் இங்கிலாந்து வெற்றியடைய முக்கியமான காரணமாக கிறிஸ் ஓக்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது

லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் 137 ரன்கள், 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன்மூலம் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் - ஜூன் 20- 24. (ஹெடிங்கிலி)

2ஆம் டெஸ்ட் - ஜூலை 2- 6. (எட்ஜ்பாஸ்டன்)

3ஆம் டெஸ்ட் - ஜூலை 10- 14. (லார்ட்ஸ்)

4ஆம் டெஸ்ட் - ஜூலை 23- 26. (ஓல்ட் டிராபோர்ட்)

5ஆம் டெஸ்ட் - ஜூலை 31- ஆக.4. (தி ஓவல்)

முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com