இனிமேல் பவுண்டரிக்கு வெளியே கேட்ச் இல்லை..! எம்சிசியின் புதிய விதிமுறை!

ஃபீல்டர்களுக்கு எதிராகவும் பேட்டர்களுக்கு சாதகமாகவும் அமையும் புதிய விதி குறித்து...
MCC outlaws 'bunny hop' boundary catches, new rule to come into effect this month
பவுண்டரி எல்லைக்கு வெளியே பிடித்த சில கேட்ச் காட்சிகள். படங்கள்: ஐஏஎன்எஸ் / இஎன்எஸ்
Published on
Updated on
1 min read

எம்சிசியின் புதிய விதிமுறையின்படி இனிமேல் பவுண்டரிக்கு வெளியே பந்தினை கேட்ச் பிடிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போதைய விதிமுறையின்படி முதல்முறை பந்தினை தொடுவது பவுண்டரி எல்லைக்குள் இருந்தால் போதுமானது.

பிறகு, எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றாலும் பந்தினை தூக்கிவீசும்போது கால் தரையில் படாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பந்தினை தடுக்கலாம்.

பின்னர், மீண்டும் பவுண்டரி லைனுக்குள் வந்து பிடித்தால் அவுட் கொடுக்கப்படும். அது விதிமுறைக்கு உள்பட்டதாகவே இருக்கிறது. இந்த விதியை ’பன்னி-ஹோப்’ என அழைக்கிறோம்.

இந்தமாதிரி பல அற்புதமான கேட்ச்களை பார்த்திருக்கிறோம். ஐபிஎல் போட்டிகளிலும் இது நடந்திருக்கிறது.

’பன்னி-ஹோப்’ கேட்ச் விதி ரத்து

தற்போது, இந்த விதியை எம்சிசி (மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்) மாற்றவிருப்பதாகக் கூறியுள்ளது.

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) உடன் சேர்ந்து இந்த விதியை அடுத்தாண்டு அக்டோபர் முதல் அதிகாரபூர்வமாக அமலுக்குக் கொண்டுவர இருப்பதாக இஎஸ்பிஎன் தகவல் அளித்துள்ளது.

ஆனால், இந்த மாதமே இந்த விதியை ஐசிசி அமல்படுத்தவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் ஜூன்.17 முதல் இந்த விதியை அமல்படுத்தவிருக்கிறது.

இந்த விதி மாற்றம் ஆட்டத்தின் சுவாரசியம், உடற்தகுதியை கெடுப்பதாகவும் தவறானதெனவும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

முக்கியமாக 2023 பிக்பாஷ் லீக்கில் மைக்கெல் நசீர் பிடித்த ’பன்னி-ஹோப்’ பாணியிலான கேட்ச் பேசுபொருளானது.

புதிய விதியில் என்ன மாற்றம்?

இந்தப் புதிய விதியில் ஃபீல்டர் வெளியே சென்று பந்தினை தடுத்து அடுத்ததாக பவுண்டரி லைனுக்குள் வந்து கேட்ச்சை நிறைவு செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை பந்தினை பவுண்டரி எல்லைக்கு வெளியே தொட்டால் அது விக்கெட்டு கொடுக்கப்படாது. மாறாக பவுண்டரி கொடுக்கப்படும்.

இதற்கு முன்பாக இருந்த விதி நியாயமற்றதாக எம்சிசி கருதுவதால் இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது.

ஃபீல்டர்கள் இன்னமும் தங்களது அற்புதமான கேட்சை பிடிக்க வாய்ப்பிருக்கிறது. எல்லைக்கோட்டுக்கு வெளியே ஒருமுறைச் சென்று தடுத்துவிட்டு எல்லைக்கோட்டுக்கு உள்ளே வந்து கேட்ச்சை நிறைவு செய்யலாம்.

இது ஃபீல்டர், பேட்டர்களுக்கு நியாயமானதாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com