இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
ஷர்துல் தாக்குர் நம்பிக்கை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வித்தியாசமான சவால்களை அளிக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடவுள்ளது மிகவும் உற்சாகமாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கேற்றவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அணியில் புதிய ஆற்றல் இருப்பது நல்ல விஷயம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அணியில் திறமையான இளம் வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகமளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.
இதையும் படிக்க: மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!
வெளிநாடுகளில் தொடர்களைக் கைப்பற்றுவது எப்போதும் சிறப்பான விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரைக் கைப்பற்றினால், அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!

57-0: மும்பையின் துரந்தர் ஷர்துல் தாக்குர்..! ஜாலியாக விமர்சிக்கும் மும்பை, சிஎஸ்கே ரசிகர்கள்!

எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


