அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
India's Sai Sudharsan reacts as he walks off the field after losing his wicket on day one
அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறும் சாய் சுதர்சன்படம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சாய் சுதர்ஷன் டக் அவுட்; இந்தியா - 92/2

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அறிமுக வீரர் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்ஷன் அவர் சந்தித்த 4-வது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இதனால், அவருடைய அறிமுகப் போட்டி சிறப்பானதாக அமையவில்லை.

இந்திய அணி உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com