இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தொடருக்கான நியூசி. மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
விக்கெட் கீப்பர் இஸி கேஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹேலி ஜென்சன் மற்றும் பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக வரவிருக்கும் டி20 தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இஸி கேஸ் ஒருநாள் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்று அசத்தியது.
டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பர்பாலி இங்கிலிஸ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ப்ரீ இல்லிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஃப்ளோரா டெவன்ஷயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பாலி இங்கிலிஸ் மற்றும் ப்ரீ இல்லிங் ஆகியோர் இலங்கை ஒருநாள் தொடரின் மூலம் அறிமுகமான நிலையில், ஃப்ளோரா டெவன்ஷயர் அறிமுக வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார் .
நியூசிலாந்து அணி விவரம்
சுசி பேட்ஸ் (கேப்டன்), மேடி கிரீன், பாலி இங்கிலிஸ், ஜார்ஜியா பிளிம்மர், இஸி ஷார்ப், ப்ரூக் ஹாலிடே, எம்மா மெக்லியோட், ஈடன் கார்சன், ப்ரீ இல்லிங், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஃப்ளோரா டெவன்ஷயர்.
இதையும் படிக்க: ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...