உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்..
உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பந்த்..
உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பந்த்..
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லக்னௌ அணியினர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். இந்த நிகழ்வில், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பந்த், ஆர்யன் ஜுயால், ஹிம்மத் சிங், அப்துல் சமத், சக வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் உள்பட பல முக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!

இதுபற்றி முதல்வர் யோகி கூறும்போது, “கடந்த எல்லா தொடர்களிலும் லக்னௌ அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் கோப்பையை வெல்ல பாடுபடுவார்கள். இந்த அணி ஒழுக்கம், அர்பணிப்புக்கு பெயர் பெற்றது. இவர்கள் கோப்பையை வென்று நம் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்” என்றார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பிளே-ஆப் சுற்றுவரை முன்னேறிய லக்னௌ அணி, எலிமினேட்டரில் தோற்று வெளியேறியது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 7 ஆம் இடம் பிடித்தது.

மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சுமார் ரூ.27 கோடிக்கு லக்னௌ அணியால் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோருக்குப் பிறகு எல்எஸ்ஜியின் நான்காவது கேப்டனாக இவர்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் வருகிற மார்ச் 24 ஆம் தேதி தில்லிக்கு எதிரான போட்டியில் மோதவிருக்கிறது. இந்தப் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com