இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
முழு உடல்தகுதி இல்லை
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் மருத்துவக்குழு கூறியதன் அடிப்படையில் பார்க்கையில், இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடவே வாய்ப்பிருக்கிறது. மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை வென்று கொடுப்பவர் அவர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது, ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழுமையாக விளையாட முடியாவிட்டாலும், அவர் அணியில் இடம்பெற்றுள்ளதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 5 போட்டிகளில் அவர் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுகபோகங்களில் மனஞ்செலுத்த மாட்டார்

கடினமான வேலையை எப்போதும் விரும்புகிறேன்: ஜஸ்பிரித் பும்ரா

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


