புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஹாரி புரூக் தலைமையில் முதல் போட்டி: இங்கிலாந்து சாதனை வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து...

News image
இங்கிலாந்து அணி. - படம்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட்
Updated On :30 மே 2025, 6:07 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பேஸ்டானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 400/8 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 82 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 26.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் 25, ஜெய்டன் சியல்ஸ் 29 ரன்கள் அடித்தார்கள்.

இங்கிலாந்து சார்பில் சகீப் முகமது, ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

238 ரன்கள் வித்தியாசத்தில் ஹாரி புரூக்கின் தலைமையில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல்முறையாக ஒருநாள் போட்டிகளில் முதல் 7 பேட்டர்களும் 35-க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.