பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

சிகரெட் புகைத்து மீண்டும் சர்ச்சையில் ககிசோ ரபாடா! விடியோ வைரல்!!

குஜராத் டைட்டன்ஸ் வீரரான வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சிகரெட் புகைத்ததாகப் பகிரப்பட்டு வரும் விடியோவைப் பற்றி...

News image

ககிசோ ரபாடா.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:23 am

குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சிகரெட் புகைத்ததாகப் பகிரப்பட்டு வரும் விடியோ பல்வேறு சர்ச்சைகளைத் தூண்டியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் நடைபெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கின்றன.

முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் 6 போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றி, மூன்று தோல்வி என 5 வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, அடையாளம் தெரியாத ஓரிடத்தில் அமர்ந்து சிகரெட் புகைப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளியின் உண்மைத்தன்மை என என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், ரபாடா சிகரெட் புகைப்பது குறித்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்புவதால், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளியில் இருப்பவர் ரபாடா தானா? என்ற சந்தேகம் எழுந்தாலும், அவருடன் குஜராத் அணியினர் பலரும் உடனிருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரபாடா, இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், தற்போது உதா நிறத் தொப்பிக்கான தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில், போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் சிக்கிய ரபாடாவுக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரபாடா சிகரெட் புகைத்திருப்பது கடந்த கால ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், யுஸ்வேந்திர சஹால் புகைப்பிடித்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற ஒரு வைரல் விடியோ வெளியானபோது, ​​இதேபோன்ற சலசலப்புகள் எழுந்தன. இருப்பினும், அந்த விடியோவின் உண்மைத் தன்மை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோன்று, ரபாடாவின் விடியோவும் வெளியாகியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வீரர்களின் நடத்தை குறித்து விமர்சித்தும், கவலைகளை எழுப்பி கொந்தளித்துள்ளனர்.

Summary

A video featuring Kagiso Rabada has gone viral on social media, with the Gujarat Titans pacer allegedly seen smoking what appears to be a cigarette at an unconfirmed location.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.