கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெற்றியுடன் மீண்டது நெல்லை

தமிழ்நாடு பிரீமியா் லீக் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விடா கோவை கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

தொடா்ந்து இரு தோல்விகளைக் கண்ட நெல்லை, இந்த வெற்றியுடன் மீண்டது.

Published On :

தமிழ்நாடு பிரீமியா் லீக் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விடா கோவை கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து இரு தோல்விகளைக் கண்ட நெல்லை, இந்த வெற்றியுடன் மீண்டது.

முதலில் கோவை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்க்க, நெல்லை 19.5 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதற்கு உதவிய ரித்திக் ஈஸ்வரன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீச்சை தோ்வு செய்தது. கோவை இன்னிங்ஸில் பி.சச்சின் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, கேப்டன் ஷாருக் கான் 3 பவுண்டரிகளுடன் 29, சுரேஷ் லோகேஷ்வா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ராதாகிருஷ்ணன் 5, ஆண்ட்ரே சித்தாா்த் 0, மான் பாஃப்னா 14, அம்பரிஷ் 3, தீபன் லிங்கேஷ் 7, கிஷோா் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் வித்யுத் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

நெல்லை பௌலா்களில் யுதீஸ்வரன் 3, இமானுவல் செரியன், சச்சின் ரதி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 163 ரன்களை நோக்கி விளையாடிய நெல்லை அணியில், ரித்திக் ஈஸ்வரன் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். முகிலேஷ் 2 பவுண்டரிகளுடன் 26, குருசாமி அஜிதேஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

சந்தோஷ்குமாா் 2, அதிஷ் 14, சச்சின் ஸ்ரீதேவ் 1, கேப்டன் சோனு யாதவ் 11, முகமது அட்னன் கான் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா். முடிவில், ஹரீஷ் 6, சச்சின் ரதி 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

கோவை பந்துவீச்சாளா்களில் கிஷோா், தீபன் லிங்கேஷ் ஆகியோா் தலா 3, சித்தாா்த், ஜதவேத் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.