கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

5 ரன்களில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பதை தவறவிட்ட தேவ்தத் படிக்கல்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 ரன்களில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் தவறவிட்டார்.

News image

தேவ்தத் படிக்கல் - படம் | பிசிசிஐ

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:08 pm IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 ரன்களில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் தவறவிட்டார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

178 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல், இரண்டாவது இன்னிங்ஸில் 75 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்கள் என இந்தப் போட்டியில் தேவ்தத் படிக்கல் 211 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அகமதாபாதில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் டிராவிட், முதல் இன்னிங்ஸில் 177 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களும் எடுத்தார். அந்தப் போட்டியில் அவர் குவித்த 215 ரன்களே இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்கி விளையாடிய இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 211 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல், ராகுல் டிராவிட்டின் இந்த சாதனையை முறியடிப்பதை 5 ரன்களில் தவறவிட்டார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையையும் ராகுல் டிராவிட் தன்வசம் வைத்துள்ளார். அவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 305 ரன்கள் (முதல் இன்னிங்ஸ் - 233 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் - 72* ரன்கள்) குவித்தார்.

Summary

Devdutt Padikkal missed the opportunity to break Rahul Dravid's record by five runs in the Test match against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.