

எஸ்ஏ20 கிரிக்கெட்டில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த அணி இரண்டாவது முறையாக எஸ்ஏ20 வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எஸ்ஏ20 லீக்கில் குவாலிஃபயர் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் நேற்றிரவு (ஜன.21) மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 170/7 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 50, ஜோர்டன் ஹெர்மன் 41 ரன்கள் எடுத்தார்கள்.
பிரிடோரியா கேபிடல்ஸ் அணி சார்பில் பந்துவீசிய பிரைஸ் பார்சன்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் செய்த பிரிடோரியா கேபிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 172/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த அணியில் அதிகபட்சமாக டெவால்டு பிரெவிஸ் 75* (38 பந்துகளில்), பிரைஸ் பார்சன்ஸ் 60 ரன்கள் எடுத்தார்கள்.
பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்திய பிரைஸ் பார்சன்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
டெவால்டு பிரெவிஸ் சிறப்பாக விளையாடியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.