

யு19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக் (18 வயது) அதிவேகமாக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
யு19 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 204/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வில் மலாஜ்சுக் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் மலாஜ்சுக் 51பந்துகளில் சதமடித்து புதிய சாதனையை படைத்தார்.
யு19 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்தவர்கள்
1. வில் மலாஜ்சுக் - 51பந்துகள் (ஆஸ்திரேலியா, 2026 )
2. காசிம் அக்ரம் - 63 பந்துகள் (பாகிஸ்தான், 2022)
3. ராஜ் பாவா - 69 பந்துகள் (இந்தியா, 2022)
4. விரன் சமுடிதா - 75 பந்துகள் (இலங்கை, 2026)
5. ஜார்ஜ் வான் ஹீர்டன் - 89 பந்துகள் (தெ.ஆ. 2022)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.