

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியும் விலக இருப்பதாக பிசிபியின் தலைவர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தை நீக்கிய ஐசிசியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு
இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் பிப்.7 முதல் தொடங்குகின்றன.
வங்கதேசம் இந்தியாவில் விளையாட மறுத்ததால் அந்த அணியை நீக்கி, ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்க இருப்பதாக முடிவு எடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது:
இந்த விஷயத்தில் நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நீண்ட கால நோக்கில் நாம் இதை சிந்திக்க வேண்டும்.
சகோதரர்களாக பாகிஸ்தான் - வங்கதேசம்
நமக்கு குறைவான பணம் கிடைக்கும். குறைவான பணத்தை வைத்து நாம் மேலாண்மை செய்ய வேண்டும். ஆனால், இந்த முடிவு வங்கதேசத்துடனான உறவில் தாக்கம் ஏற்படும்.
பிரதமர் நாட்டில் இல்லை. அவர் நாடு திரும்பியதும் அவரிடம் பேசி இறுதி முடிவெடுக்கப்படும்.
பாகிஸ்தானும் வங்கதேசமும் இரண்டு சகோதரர்கள் மாதிரி புதிய பந்தத்தில் இணைய இருக்கிறோம் என்றார்.
1971-க்குப் பிறகு வங்கதேசமும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியாக பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.