யு19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 28.3 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து சார்பில் ஹியூகோ போக்யூ அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
நியூசிலாந்து வீரர்களில் 6 பேர் ஒற்றை இலக்கை ரன்களை மட்டுமே எடுத்தார்கள்.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசி, அப்துல் சுபன் 4, அலி ராஸா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தற்போது, பேட்டிங் செய்துவரும் பாகிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.