தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

இங்கிலாந்து நட்சத்திரம் டாமி பியூமண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டாமி பியூமண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

டாமி பியூமண்ட்.

Updated On :9 ஜூலை 2026, 4:40 pm IST

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டாமி பியூமண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிரணி ஒரேயொரு வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்தின் லார்ட் திடலில் நடைபெறும் போட்டி, நாளை (ஜூலை 10) தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை டாமி பியூமண்ட், இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் ஓய்வுபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக மூன்று ஃபார்மெட்களிலும் 260 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டாமி பியூமண்ட், டெஸ்ட்களில் 612 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 4,738 ரன்களும், டி20 போட்டிகளிலிருந்து 1975 ரன்களும் எடுத்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடி வரும் டாமி, மொத்தமாக 14 சதங்கள் விளாசி இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற பெருமையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.

2017-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்றபோது, ​தொடர் நாயகியாகவும் டாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 410 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும், ஜூலை மாதம் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' தொடரில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Summary

England opener Tammy Beaumont has announced that she will retire from international cricket after the one-off Test against India at Lord’s Cricket Ground beginning on July 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.