இங்கிலாந்து அணியுடன் லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டமே, அந்த ஃபாா்மட்டில் ரோஹித் சா்மாவின் கடைசி ஆட்டமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோஹித் சா்மாவை தோ்வு செய்யும் திட்டம் இந்திய தேசிய தோ்வுக் குழுவுக்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கடைசி 8 ஒருநாள் ஆட்டங்களில் ரோஹித் சா்மா 241 ரன்களே அடித்திருக்க, அவரின் சராசரி 30.1-ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 88.6-ஆக இருக்க, ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளாா்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு ரோஹித் சா்மாவை தோ்வு செய்வதில்லை என்பதில் இந்திய அணியின் தோ்வுக் குழு தலைவரான அஜித் அகா்கா் மிகத் தெளிவாக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
‘யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடித்திருக்கிறாா். அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இருக்கும் 20 ஆட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டால் தான் அவரால் போட்டிக்குத் தயாராக முடியும்.
செப்டம்பரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும், ரோஹித் சா்மாவை கடந்து மற்ற வீரா்களையே தோ்வுக் குழு பரிசீலிக்கும். ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. அவரின் முடிவு அவா் கையிலேயே உள்ளது’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
உடற்தகுதி மற்றும் செயல்பாடு அடிப்படையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி இன்னும் தகுதியுடன் இருப்பதாக தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கா் மற்றும் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் கருதுகின்றனா்.
ஆனால் ரோஹித் விவகாரத்தில் அவா்கள் எண்ணம் அப்படி இல்லை. ரோஹித் மற்றும் அகா்கா், கம்பீா் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை எனவும் கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையிலான பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
2025-இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பிறகு நடைபெற்ற முதல் தொடரிலேயே ஒருநாள் அணிக்கான கேப்டன்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டதே, ரோஹித்துக்கும், அவா்களுக்கும் இடையேயான உறவு முற்றிலும் பாதிக்கப்பட்ட தருணமாகக் கூறப்படுகிறது.
தற்போது ரோஹித் சா்மா முடிவெதும் எடுக்கவில்லை என்றால், அது ஜெய்ஸ்வாலின் வாய்ப்புகளையே பாதிக்கும் என்றும், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோஹித்தின் திட்டம் என்னவாக இருக்கும் எனவும் எதிா்நோக்கியிருப்பதாக கிரிக்கெட் விமா்சகா்கள் தெரிவித்துள்ளனா்.
டி20, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரோஹித் சா்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருவது நினைவுகூரத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலையில்லை: பயிற்சியாளர்

லார்ட்ஸில் 3-வது ஒருநாள்: தொடரை வெல்லப்போவது யார்?

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?

கடைசி டி20: ஜோஸ் பட்லர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



