ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 8 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி, ரிச்சர்ட் நிகராவா, பிராட் ஈவன்ஸ், நியூமேன் நியாம்ஹுரி மற்றும் பிரையன் பென்னட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 24 ரன்கள், ரியான் பர்ல் 20 ரன்கள், பிராட் ஈவன்ஸ் 19 ரன்கள் , டியான் மையர்ஸ் 12 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, யஷ் தாக்குர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 26) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team won the second T20 match against Zimbabwe by 90 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 220 ரன்கள் இலக்கு!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

7 ஆண்டுகளுக்குப் பிறகு... தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்த இந்திய அணி!

வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய ஜிம்பாப்வே!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




