கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிரசித் கிருஷ்ணா பந்துவீச, ரோஹித் சர்மா கேட்ச்..! ஒரே மாதிரி ஆட்டமிழந்த 3 ஆப்கன் வீரர்கள்!

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்த 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் குறித்து...

India's Prasidh Krishna celebrates the wicket of Afghanistan's Rahmanullah Gurbaz during the third ODI cricket match between Afghanistan and India in Chennai, India, Saturday, June 20, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிரசித் கிருஷ்ணா. - படம்: ஏபி

Published On :

சென்னையில் நடைபெற்றுவரும் கடைசி ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தது கவனம் பெற்றுள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, விளையாடி வருகிறது.

இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தப் போட்டியில், 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 102/4 ரன்களை எடுத்துள்ளது. இதில் 4 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தியுள்ளார்.

இந்த 4 விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகள் ஒரே மாதிரியாக விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆஃப் சைடில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஆட்டமிழந்தார்கள்.

நான்காவது விக்கெட் பிரசித் கிருஷ்ணா பந்துவீச, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரிடம் சென்றது. பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சை வர்ணனையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக இதேமாதிரி ஒரு பந்துவீச்சாளரின் ஓவரில் 3 கேட்ச் எடுத்தவர்களா விவிஎஸ் லக்‌ஷ்மனன் (இர்ஃபான் ஓவரில், 2004), ஷிகர் தவான் (பும்ரா ஓவரில், 2018) எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, 2-0 என தொடரை வென்றுள்ள இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

Summary

Identical setups, identical results: 3 wickets from Prasidh Krishna bowling Rohit Sharma catch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.