பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதம்..! 218 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கன்!

இந்தியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்து...

Afghanistan's captain Hashmatullah Shahidi celebrates his century during the third ODI cricket match between Afghanistan and India in Chennai, India, Saturday, June 20, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, பிரசித் கிருஷ்ணா. - படங்கள்: ஏபி

Published On :

இந்தியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதம் அடித்து அசத்தினார். 44.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 36 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், 141 ரன்களுக்கு தனது 5ஆவது விக்கெட்டை இழந்தது. இதில், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 131 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அசத்தினார்.

அஸ்மத்துல்லா ஓமர்சாய் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இறுதியில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தியாவின் சார்பில் குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே, ப்ரின்ஸ் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏழு பேர் ஒற்றை இலக்கங்களில் ரன்கள் எடுத்து அதிர்ச்சி அளித்தார்கள்.

ஏற்கெனவே, 2-0 என தொடரை வென்றுள்ள இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

Summary

Prasidh Krishna 5 wicekts Hashmatullah Shahidi century afghan score 218 runs against India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.