/

ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்த அக்‌ஷர் படேல்!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image

அக்‌ஷர் படேல் - படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)

Updated On :1 மணி நேரம் முன்பு

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் தரப்பில் சிறப்பாக விளையாடிய கேப்டன் அக்‌ஷர் படேல் அதிகபட்சமாக 30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் 56 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்து அக்‌ஷர் படேல் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 174 போட்டிகளில் விளையாடியுள்ள அக்‌ஷர் படேல் 2016 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் அடங்கும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Delhi Capitals captain Axar Patel has set a record in the IPL series by crossing the 2,000-run mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.