தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணைந்த லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ்!

சிஎஸ்கே அணியில் இணைந்த இரண்டு புதிய வீரர்கள் குறித்து...

Livingston, Jack Edwards

லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் - படங்கள்: சிஎஸ்கே

Updated On :

நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்தார்கள். தற்போது இரு வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்கள். அதேபோல் சிஎஸ்கே வீரர்கள் அந்த அணிக்கு மாறியுள்ளார்கள்.

ஐபிஎல் 2027 சீசனுக்காக டிரேடிங் முறையில் இந்த இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விரைவில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் முறையே ரூ.6 கோடி மற்றும் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் முறையே ரூ.4.8 கோடி, ரூ.2கோடிக்கு விற்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (33 வயது) 100 சர்வதேச போட்டிகளில் 1,500-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் 1000 ரன்களுக்கும் அதிகமாக, 155 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் (26 வயது) டி20 கிரிக்கெட்டில் 865 ரன்கள், 58 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முதல்தர போட்டிகளில் 2,500 ரன்கள், 4 சதங்கள் அடித்துள்ளார்.

Summary

Chennai Super Kings trade in Liam Livingstone and Jack Edwards from SRH for Khaleel Ahmed and Nathan Ellis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.