மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

2018 மோசடி: கவாஜாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியது என்ன?

உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியிருப்பதாவது...

Australia's Mitchell Marsh walks back to the pavillion after his dismissal during the third one-day international (ODI) cricket match between South Africa and Australia at Senwes Park in Potchefstroom on September 30, 2026. (Photo by PHILL MAGAKOE / AFP)

மிட்செல் மார்ஷ் (கோப்புப் படம்) - AFP

Updated On :

உஸ்மான் கவாஜாவின் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், “இப்போதைக்கு நான் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2018 டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி மணல்காகிதத்தைப் (sandpaper) பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தியதால் பென் கிராஃப்ட் , கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னருக்கு அபாரதத்துடன் தண்டனை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் டெஸ்ட்டில் ஓய்வுபெற்ற உஸ்மான் கவாஜா இந்த சம்பவம் குறித்து தனது வாழ்க்கை வரலாற்று நூலில், “நாங்கள் அந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் ஏமாற்றி இருக்கிறோம். இது அனைத்து வீரர்களுக்கும் தெரியும்” எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து மிட்செல் ஸ்டார்க் மறுப்புத் தெரிவிக்க, முன்னாள் வீரர் டேவிட் வார்னர், “கவாஜா கூறியது 100 சதவிகிதம் உண்மை” எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் நாளை (நவ.13) ஒருநாள் போட்டியில் மோதவிருக்கிறது. இந்த நிலையில், கேப்டன் மிட்செல் மார்ஷிடம் செய்தியாளர்கள் இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியிருப்பதாவது:

இது குறித்த சப்தம் அதிகமாக இருந்து வருகிறது. சிலர் தங்களது கதைகளைச் சொல்கிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன். ஆனால், என்னுடைய கதையை இன்று சொல்லப்போவதில்லை. இது விசித்திரமானதாக இருந்தாலும் நான் நாளைய போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்பதை ஞாபகப்படுத்த நான் இங்கு வரவில்லை. உஸ்மான் கவாஜா புத்தகம் எழுதியுள்ளார். நான் அவரை மதிக்கிறேன். என்னுடைய முழு கவனமும் நாளைய போட்டியில் மட்டுமே இருக்கிறது.

என்னுடைய உண்மையான பதில் என்னவென்றால் நான் அதிலிருந்து முன்னேறி வந்துவிட்டேன். சிலர் இன்னும் அதிலேயே இருக்கலாம்; மற்றவர்களின் கருத்தையும் மதிக்கிறேன்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டி மிகுந்த சுவராசியமாக இருக்கும். சிறந்த தொடராக இருக்குமென நினைக்கிறேன் என்றார்.

Summary

‘I’ve moved on’: Marsh reveals Khawaja phone call in ball-tampering grilling

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.