தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

2018ல் இரண்டு டெஸ்ட்டுகளில் ஏமாற்றினோம்... சர்ச்சையான உஸ்மான் கவாஜாவின் புத்தகம்!

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில் கூறிய அதிர்ச்சிகரமான தகவல் குறித்து...

Australia's former Test cricketer Usman Khawaja's autobiography, SABR, is displayed at a book stall in Sydney on November 10, 2026.
Cricket Australia chief Todd Greenberg on November 10, ruled out reopening the investigation into the sandpapergate ball-tampering scandal, saying he did not see "any compelling reason" for a new probe.

உஸ்மான் கவாஜாவின் வாழ்க்கை வரலாற்று நூல் - AFP

Updated On :

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தில், “தென்னாப்பிரிக்காவில் 2018ல் ஒரு போட்டியில் மட்டுமல்ல, இரண்டு போட்டிகளில் பந்தை சேதப்படுத்தினோம்” என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியா 2018ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட்டில் விளையாடியது. அதில் 1-3 என தோல்வி அடைந்தது.

இந்தத் தொடரில், கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் மணல்காகிதத்தைப் (sandpaper) பயன்படுத்தி பந்தைச் சேதப்படுத்தியதால் பென் கிராஃப்ட் , கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னருக்கு அபாரதத்துடன் தண்டனை விதிக்கப்பட்டது.

வார்னருக்கு கேப்டனாக இருக்க வாழ்நாள் தடையும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இரண்டாண்டு தண்டனையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டன.

சமீபத்தில் டெஸ்ட்டில் ஓய்வுபெற்ற உஸ்மான் கவாஜா இந்த சம்பவம் குறித்து தனது வாழ்க்கை வரலாற்று புத்தக்கத்தில் (SABR) கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு கட்டத்தில் பந்து அதிகமாக திரும்பியது. விக்கெட் வீழ்த்திய பிறகு ஒரு பந்துவீச்சாளர் எங்களிடம், ‘நண்பர்களே, இப்போது சிறப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்யாதீர்கள். ஏனெனில் அவ்வளவு வேகமாக திரும்புகிறது’ என்றார். நாங்கள் பலரும் சிரித்தோம். (நாங்கள் எதுவுமே செய்ய நினைக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகு வந்தபோது பந்து சேதமாகியிருந்தது).

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. கேப் டவுனில் சிக்கிய நீங்கள், போர்ட் எலிசபெத்தில் சிக்கவில்லை? ஆமாம், நாங்கள் செய்தோம். அதற்கு முன்பாகவும் நாங்கள் செய்யவில்லை என்பதைக் கூற யாருமில்லையே!

நடுவர்கள் பந்தை களத்தில் விட்டுச் சென்றிருந்தார்கள். அந்த இடைவேளைக்குப் பிறகு நாங்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினோம். பளப்பளப்பான பகுதி பளபளப்பாகவும் கரடுமுரடான பகுதி மேலும் கரடுமுரடாகவும் இருந்தன. மணல்காகிதத்துக்கு நன்றி.

ஒவ்வொரு செசன் முடிவிலும் பந்து என்னிடம் வரும்போது ’இதில் நான்கூட ஸ்விங் செய்வேன்’ என நினைத்தேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன என்றார். இது கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Usman Khawaja reveals another shocking detail, claims Australia 'cheated' across two Tests against SA in 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER