பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

நியூசிலாந்து அபாரம்: 6 விக்கெட்டுகள் இழப்பு; 240 ரன்கள் பின்னிலையில் இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட்டில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய வீரர்கள் குறித்து...

New Zealand's Matt Henry, center, celebrates with teammates after taking the wicket of India's Yashasvi Jaiswal during the second day of the second cricket test match in Christchurch, New Zealand, Saturday, Nov. 28, 2026. (Chris Symes/Photosport via AP)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் - AP

Updated On :

கிறிஸ்ட்சர்ச் திடலில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணி டாஸ் வென்று பந்து வீசியது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது.

இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினார்கள். அதிகபட்சமாக கே.எல். ராகுல் 25 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளும் மாட் ஹென்றி, நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

துருவ் ஜுரெல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 240 ரன்கள் பின்னிலையில் இருக்கிறார்கள். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

முதல் போட்டி சமனில் முடிந்ததால் இந்தக் கடைசி போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா, நியூசிலாந்து முறையே 4,3ஆவது இடங்களில் இருக்கின்றன.

Summary

Christchurch test: New Zealand excels: India loses 6 wickets, trails by 240 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.