2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

நியூசிலாந்து டி20 தொடர்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார்!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.

Bhuvneshwar Kumar (File photo)

புவனேஷ்வர் குமார் (கோப்புப் படம்)

Published On :

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட அணியை ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்துகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா (துணைக் கேப்டன்), அக்‌ஷர் படேல், ஷிவம் துபே, நிதீஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.

Summary

The BCCI announced the Indian squad for the T20 series against New Zealand today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.