சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

சுழற்பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மே.இ.தீவுகள் பயிற்சியாளர்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் தயாராக வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் வலியுறுத்தியுள்ளார்.

படம் | AP

Published On :

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் தயாராக வேண்டும் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (அக்டோபர் 9) ராஞ்சியில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டர்கள் தயாராக வேண்டும் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டியின்போது, ஒவ்வொரு பந்துக்கும் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். எங்களது மிடில் ஆர்டர் பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். மிடில் ஆர்டரில் ஷிம்ரன் ஹெட்மேயர், சாய் ஹோப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் மிடில் ஆர்டரில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினால், பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். அதனால், நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டினை இழக்காமல் விளையாட வேண்டும் என்றார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

West Indies bowling coach Ravi Rampaul has urged the team's batters to prepare to face the Indian team's spin-bowling threat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.