
டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த ஷிம்ரன் ஹெட்மேயர்!
டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மேயர் 7000 ரன்களைக் கடந்துள்ளார்.

ஷிம்ரன் ஹெட்மேயர் (கோப்புப் படம்) - படம் | AP
டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மேயர் 7000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷிம்ரன் ஹெட்மேயர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி அசத்தினார்.
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம், ஷிம்ரன் ஹெட்மேயர் டி20 போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மேயர் 111 ரன்கள் எடுத்தார். டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
29 வயதாகும் ஷிம்ரன் ஹெட்மேயர் இதுவரை 352 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 352 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7096 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும்.
இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 16 டெஸ்ட், 59 ஒருநாள் மற்றும் 85 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிம்ரன் ஹெட்மேயர் 4000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
West Indies cricketer Shimron Hetmyer has crossed the 7,000-run mark in T20 cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






