பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

2018 மணல் காகித மோசடி நிகழ்வுகளை மறக்க நினைக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவில் 2018ல் நடந்த மணல் காகித மோசடி குறித்து மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

Australia’s Steve Smith reacts as he walks off the ground after being dismissed LBW during the first day of the second cricket Test match between Australia and Bangladesh at the Great Barrier Reef Stadium in Mackay on August 22, 2026. (Photo by DAVID GRAY / AFP)

ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்) - AFP

Published On :

தென்னாப்பிரிக்காவில் 2018ல் நடந்த மணல் காகிதத்தை வைத்து பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மனம் திறந்து பேசியுள்ளார்.

டேவிட் வார்னர் கேப்டனாகவும் ஸ்மித் துணைக் கேப்டனாகவும் இருக்கும்போது 2018ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில், கேமரூன் கிராஃப்ட் என்ற வீரர் மணல் காகிதத்தை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் துணை கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் அதனைத் தடுக்காமல் விட்டதற்காக அவருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை வித்தித்தது. கேப்டனாக செயல்பட 2 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.

வார்னருக்கு ஓராண்டு தடையுடன் வாழ்நாள் முழுவதும் கேப்டனாகக் கூடாதென அறிவிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தடையும் 2024ல் நீக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஸ்மித் இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பதாவது:

எனக்கு காமிரா என்றாலே பிடிக்காது. உண்மையில் காமிரா இருந்தால் எனக்கு பதற்றம் ஆகிவிடும். என் வாழ்க்கையில் அது ஓர் அதிர்ச்சிகரமான அனுபவம். காமிராவின் பிளாஸ் சப்தம் கேட்டாலே எனக்கு அந்த நாள்தான் நினைக்கு வரும்.

அப்போதைய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் 24-48 மணி நேரத்தில் ஓராண்டு வரை எனக்கு தடை எனக் கூறினார்கள். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையில் கூட்டமாகச் சூழ்ந்துகொள்ளப்பட்டேன். பின்னர், அங்கிருந்து ஆஸ்திரேலியா வந்து செய்தியாளர்களைச் சந்தித்தேன்.

இன்றும் அந்த நினைவலைகள் அங்கும் இங்குமாக இருக்கின்றன. அது ஒரு கடினமான காலகட்டம். குறிப்பாக முதல் சில நாள்களில் என்னுடைய மனநிலை சிறப்பானதாக இல்லை. அந்த நிலைக்கு மீண்டும் செல்லக்கூடாது. ஆனால், நிச்சயமாக அதிலிருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

2018ல் நடந்த பல நினைவுகளை அழிக்க முயன்றுள்ளேன். உண்மையில் அதிகமாக மறந்துவிட்டேன். என் நினைவகத்தில் இருந்து பலவற்றை முடக்கிவிட்டேன். எனக்கு நடந்தவற்றை உத்வேகமாக எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாட முயற்சித்தேன் எனக் கூறியுள்ளார்.

Summary

AUS vs SA: Steve Smith still gets 'little flashbacks' from 2018 sandpaper gate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER