இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

ஷேன் வார்னேவுக்குப் பிறகு... சாதனைப் பட்டியலில் இணைந்த ஆடம் ஸாம்பா!

ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவின் சாதனை குறித்து...

Australia's bowler Adam Zampa bowls during a second one day international cricket match between Zimbabwe and Australia in Harare, Zimbabwe, Friday, Sept.18, 2026. (AP Photo/Wonder Mashura)

ஆடம் ஸாம்பா - படம்: ஏபி

Published On :

ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா (34 வயது) ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. 356/6 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்மூலம் ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் எழாவது ஆஸ்திரேலிய வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சுழல் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக ஷேன் வார்னே மட்டுமே 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பிரெட் லீ, க்ளென் மெக்ராத் 380 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

ஒருநாள் போட்டிகளில் 200+ விக்கெட் வீழ்த்திய ஆஸி. வீரர்கள்

1. பிரெட் லீ - 380 விக்கெட்டுகள் (217 இன்னிங்ஸ்)

2. க்ளென் மெக்ராத் - 380 விக்கெட்டுகள் (247 இன்னிங்ஸ்)

3. ஷேன் வார்னே - 291 விக்கெட்டுகள் (190 இன்னிங்ஸ்)

4. மிட்செல் ஸ்டார்க் - 247 விக்கெட்டுகள் (130 இன்னிங்ஸ்)

5. மிட்செல் ஜான்சன் - 239 விக்கெட்டுகள் (150 இன்னிங்ஸ்)

6. க்ரைக் மெக்டோர்மெட் - 203 விக்கெட்டுகள் (138 இன்னிங்ஸ்)

7. ஆடம் ஸாம்பா - 210 விக்கெட்டுகள் (123 இன்னிங்ஸ்)

Summary

Adam Zampa becomes the second Australian spinner to take 200 wickets in ODIs after Shane Warne

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.