
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து நாதன் எல்லிஸ் விலகல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.

நாதன் எல்லிஸ் - படம் | ஐசிசி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் மற்றும் ஜோயல் டேவிஸ் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
JUST IN: More injury concerns for Aussies on their South Africa tour #SAvAUS https://t.co/SUHbRuvpWL
— cricket.com.au (@cricketcomau) September 28, 2026
காயம் காரணமாக ஏற்கனவே பில்லி ஸ்டான்லேக் மற்றும் ஜோஷ் இங்லிஷ் தாயகம் திரும்பிய நிலையில், தற்போது அந்த வரிசையில் நாதன் எல்லிஸ் மற்றும் ஜோயல் டேவிஸ் இணைந்துள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஜாக் எட்வர்ட்ஸுக்கும் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, நாதன் எல்லிஸ் வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார். அதன் பின், அவர் பந்துவீச்சில் ஈடுபடவில்லை. ஜோயல் டேவிஸும் மாற்று வீரராக ஃபீல்டிங் மட்டுமே செய்தார். அவரும் பந்துவீச்சில் ஈடுபடவில்லை.
வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகியுள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Summary
Nathan Ellis has been ruled out of the final ODI against South Africa due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







