சேப்பாக்கம் டி20: தோனி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ததற்கு இதுதான் காரணமா?
பொதுவாக டி20 ஆட்டங்களில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சைத்தான் முதலில் தேர்வு செய்வார்கள்...


சென்னையில் நடைபெற்று வரும் பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிராவோ, மோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோருக்குப் பதிலாக ஸ்காட் குக்ஜெலெஜின், டு பிளெஸ்ஸிஸ், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது ஏன்? பொதுவாக டி20 ஆட்டங்களில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சைத்தான் முதலில் தேர்வு செய்வார்கள்.
சென்னையில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. அதேபோல முந்தைய ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி மீண்டும் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்தார். எனினும் அந்த ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதுபோல கடந்த இருமுறை டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத்தான் தேர்வு செய்துள்ளார். ஆனால் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இத்தனைக்கும் பிராவோவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை அணியின் பந்துவீச்சு தற்போது பலவீனமாக உள்ளது. இதனால் இரண்டாவதாகப் பந்துவீச்சுவது அணிக்குச் சாதகமாக அமையும் எனச் சொல்லமுடியாது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் என்கிற முடிவுக்கு ஆடுகளத்தின் தன்மையை ஒரு காரணமாகச் சொல்லலாம். ஆனால் அவருடைய இந்த முடிவுக்கு ஒரு புள்ளிவிவரமும் முக்கியக் காரணமாக இருக்கலாம்.
2013 முதல் சென்னையில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய நான்கு ஐபிஎல் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. மேலும், சென்னையில் மாலையில் தொடங்கிய ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் - 185.
இதனால் மாலை 4 மணிக்குத் தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமாக இருக்கும் என தோனி எண்ணியிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...