தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

200-வது டி20 ஆட்டத்தை இன்று விளையாடவுள்ள சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் போட்டியின் பலமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று தனது 200-வது டி20 ஆட்டத்தை விளையாடவுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2020, 7:58 am

DIN

ஐபிஎல் போட்டியின் பலமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று தனது 200-வது டி20 ஆட்டத்தை விளையாடவுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக அமையவில்லை. இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 7-ல் தோல்வியடைந்துள்ளது. எனினும் மீதமுள்ள 4 ஆட்டங்களில் விளையாடினால் பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஐபிஎல் அணிகளில் சிஎஸ்கேவுக்கு நிகராக இன்னொரு அணியைக் கூற முடியாது. இதுவரை பங்கேற்ற 10 ஐபிஎல் போட்டிகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.  இந்தச் சாதனை வெறெந்த ஐபிஎல் அணிக்கும் கிடையாது. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் ஷார்ஜாவில் இன்று நடைபெறவுள்ள மும்பை - சிஎஸ்கே ஆட்டம், சிஎஸ்கே அணி விளையாடும் 200-வது டி20 ஆட்டமாகும். இதுவரை விளையாடிய 199 ஆட்டங்களில் 118-ல் சிஎஸ்கே வெற்றியடைந்துள்ளது. 

ஆர்சிபி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே 200 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இவற்றில் மும்பை அணி அதிகபட்சமாக 126 ஆட்டங்களில் வென்றுள்ளது.

இன்று தனது 200-வது டி20 ஆட்டத்தை வென்று ரசிகர்களை சிஎஸ்கே அணி உற்சாகப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.