தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எல்லா புகழும் மெக்கலத்துக்கே: நரைன் முடிவு பற்றி மார்கன்

​தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பயிற்சியாளர் மெக்கலத்தின் யோசனை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2020, 4:30 pm

DIN


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பயிற்சியாளர் மெக்கலத்தின் யோசனை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் கொல்கத்தா, தில்லி அணிகள் மோதின. இதில் நிதிஷ் ராணா (53 பந்துகளில் 81 ரன்கள்), சுனில் நரைன் (32 பந்துகளில் 64 ரன்கள்) மற்றும் வருண் சக்கரவர்த்தியின் (5 விக்கெட்டுகள்) சிறப்பான ஆட்டத்தால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது வீரராக கேப்டன் இயான் மார்கனுக்குப் பதில் சுனில் நரைன் களமிறக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு சுனில் நரைனை 5-வது வீரராக களமிறக்கியது பற்றி மார்கன் கூறியதாவது:

"அது பயிற்சியாளரின் முடிவு. எல்லா புகழும் பிரெண்டன் மெக்கலத்துக்கே சேரும்."

முன்கூட்டியே களமிறக்கப்பட்ட நரைன், ராணாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.