தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இன்றும் ரோஹித் களமிறங்குவது சந்தேகம்?

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :25 அக்டோபர் 2020, 11:12 am

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. ஆனால், இந்த ஆட்டத்திலும் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில்தான் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் நேரடியாக புதன்கிழமை ஆட்டத்தில் களமிறங்கினால், காயம் அடைந்ததிலிருந்து 10 நாள்கள் முழுமையாக ஓய்வு பெற்றதாகிவிடும்.

தொடரின் கடைசி கட்டம் என்பதால், வீரர்களின் உடற்தகுதியில் அணி நிர்வாகம் முழு கவனத்துடன் இருக்கும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.