தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய நடராஜனுக்கு அறுவை சிகிச்சை

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 12:07 pm

DIN

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 

30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு காயம் பெரிதானது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் நடராஜன் தெரிவித்ததாவது:

இன்று என் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னை நன்குக் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவுக்கும் பிசிசிக்கும் நன்றி. மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.