கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார்: தோல்விக்கு மத்தியில் பூத்த காதல்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம் மைதானத்தில் அரங்கேறியது.

News image
Updated On :7 அக்டோபர் 2021, 4:16 pm

DIN


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம் மைதானத்தில் அரங்கேறியது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு மைதானத்திலிருந்து ஆட்டத்தைப் பார்த்து ரசித்து வந்த தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார் தீபக் சஹார். அவரும் புன்னகையுடன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி் உள்பட அருகிலிருந்த அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மைதானத்தில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியானத் தருணம் விடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

தீபக் சஹாரும் இதை சிறப்புமிக்க தருணம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.