சிஎஸ்கேவுக்கு எதிரான இறுதிச்சுற்றில் ரஸ்ஸல் விளையாடுவது குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற தில்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. வெங்கடேஷ் ஐயர் 55 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.
இந்நிலையில் கேகேஆர் வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசியாக செப்டம்பர் 26 அன்று சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடி 20 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு காயம் காரணமாக கேகேஆர் அணி விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். கொல்கத்தா அணி பங்கேற்கும் இறுதிச்சுற்றில் ரஸ்ஸல் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஸ்ஸலின் நிலைமை பற்றி கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி கூறியதாவது:
காயத்திலிருந்து நன்கு குணமாகி வருகிறார் ரஸ்ஸல். தில்லி ஆட்டத்துக்கு முன்பாகப் பயிற்சியின்போது பந்துவீசவும் செய்தார். எனவே இறுதிச்சுற்றில் அவர் விளையாட வாய்ப்புண்டு. முதலில் மருத்துவக் குழுவினரிடம் விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் தீவிரமாகப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார் ரஸ்ஸல். மருத்துவக் குழுவினரால் அவர் விரைவில் காயத்திலிருந்து குணமாகி விடுவார். ரஸ்ஸலைப் பற்றி நன்குத் தெரியும். இறுதிச்சுற்றில் விளையாட அவர் ஆர்வமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


