மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஷுப்மன் கில் அதிரடி அரைசதம்: தில்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு

ஷுப்மன் கில்லின் அதிரடி அரைசதம் காரணமாக குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 4:15 pm

DIN

ஷுப்மன் கில்லின் அதிரடி அரைசதம் காரணமாக குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் நடப்பு சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட், ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் வேட் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். 

அடுத்த வந்த விஜய் சங்கரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் கடந்தார். பாண்டியா 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் ஆட்டமிழந்தார். அவர், 46 பந்துகளைச் சந்தித்து 84 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. டேவிட் மில்லர் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தில்லி அணியில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.