குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல்: மும்பை அணிக்கு 2ஆவது தோல்லி

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 2:16 pm

DIN

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நவி மும்பையில் நடைபெற்ற மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை. காயத்திலிருந்து குணமானாலும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணியில் கோல்டர் நைலுக்குப் பதிலாக நவ்தீப் சைனி இடம்பெற்றுள்ளார். ஜெயிஸ்வால் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் பட்லர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். 

படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 32 பந்துகளில் அரை சதமடித்தார் பட்லர். 10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. நன்கு விளையாடி வந்த சஞ்சு சாம்சன், 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையரும் அதிரடியாக விளையாடினார். பொலார்ட் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்தார். பட்லரும் ஹெட்மையரும் 22 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 

இந்த இன்னிங்ஸ் முழுக்க ஒரேவிதமான அதிரடி ஆட்டத்தையும் சிலசமயங்களில் நிதானத்தையும் வெளிப்படுத்திய பட்லர், 66 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். 14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹெட்மையர். பும்ரா வீசிய 19-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. ஹெட்மையர், பட்லரின் விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 15 பந்துகளில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 200 ரன்கள் எடுக்க முடியாமல் போனது.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா, டைமல் மில்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை அணியில் அதிசபட்சமாக இஷான் கிஷன் 53, திலக் வர்மா 61 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் சஹல், நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.