ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

ஐபிஎல் 2022 போட்டியில் முதல்முறையாக: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த கேப்டன்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதாவது 34 ஆட்டங்களுக்குப் பிறகு...

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 9:43 am

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் பாண்டியா, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. 

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதாவது 34 ஆட்டங்களுக்குப் பிறகு ஒரு கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். பகல் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை இருக்காது என்கிற காரணத்தால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.