கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகிறார் தோனி 

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவுவெடுத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 3:46 pm

DIN

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவுவெடுத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் (2 சீசன்கள் தவிர) சிஎஸ்கேவின் கேப்டனாக 12 சீசன்கள் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்த தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த பொறுப்பை ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஜடேஜா தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் 6-ல் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதனால் புதிய கேப்டன் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவுவெடுத்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கும் பொருட்டு இம்முடிவை ஜடேஜா எடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஜடேஜாவின் இந்த முடிவை ஏற்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தொடர தோனி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தோனி தலைமையில் கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றிருந்தது சிஸ்கே அணி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.