மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பலம் பெறும் நடுவரிசை: மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ்

சனிக்கிழமையன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :31 மார்ச் 2022, 12:04 pm

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ், காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

பிப்ரவரி 20 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடிய சூர்யகுமார் யாதவுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதற்காக மும்பைக்கு வந்துள்ளார். மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அணியினருடன் அவர் இணைந்துள்ளார். சூர்யகுமார் பயிற்சியில் ஈடுபடும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதனால் மும்பை அணியின் நடுவரிசை மேலும் பலம் பெறும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

தில்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. சனிக்கிழமையன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.