தோனி பாராட்டியது எனக்கு ஆச்சர்யமாக இல்லை: சாய் கிஷோர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.
தோனி பாராட்டியது எனக்கு ஆச்சர்யமாக இல்லை:  சாய் கிஷோர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.  

25 வயது சாய் கிஷோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருடம் நெட் பவுலராக இருந்தவர். இந்த முறை குஜராத் அணி 3 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரு ஆட்டங்களில் அவர் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்படவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளைக் கொடுத்தார். 3 ஆட்டங்களில் எகானமி - 5.80 

தோனி உங்களது பந்து வீச்சைக் குறித்து பாராட்டியது எப்படி இருந்தது என கேள்வி கேட்ட போது, “ உண்மையில் எனக்கு பெரிதாக ஆச்சர்யமில்லை. எனக்கு எனது பந்து வீசும் திறன் பற்றித் தெரியும். நான் சிஎஸ்கேவுக்கு விளயாடினாலும் விளையாடவிட்டாலும் எனக்கு என் மீதான சந்தேகம் இருந்ததில்லை. உள்ளூர் போட்டிகளில் 40-45 போட்டிகள் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு அனுபவம் இருக்கிறது. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக வருந்தியதில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே விளையாடி வருகிறேன்” என கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com