ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா்-1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்று முதல் அணியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது.
32 வயதான தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். நேற்றையப் போட்டியில் (மே-24) 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்குப் பங்களித்ததால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
“உண்மையில் எனக்கு சிறுது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் ஹார்திக், வழக்கமான கிரிக்கெட் ஷாட் மட்டும் அடிக்கவும் முடிந்தளவு ஆட்களில்லாத பகுதிகளில் அடிக்கவும் எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். அவரால் ( ஹார்திக்) வேகமாக ஓட முடியவில்லை. எனக்கு ஓடுவது பிடித்திருந்தது. சேஷிங்கைப் பொறுத்தவரை ஹார்திக் பாண்டியா அமைதியான பொறுப்பான வீரராக திகழ்கிறார். என் மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் அணியின் நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். நிறைய வருடங்கள் விளையாடி வருவதால் ஆட்டத்தை நன்கு புரிந்து வைத்துள்ளேன்” என ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

ரயில்வேயில் ஆசிரியர், இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


