அதிரடி... சரவெடி... ஹெட்மையரின் ஆட்ட பாணி!

ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க பெரிய போட்டி ஏற்பட்டது.
அதிரடி... சரவெடி... ஹெட்மையரின் ஆட்ட பாணி!

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷிம்ரோன் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க பெரிய போட்டி ஏற்பட்டது.

ராஜஸ்தானும் தில்லியும் கடுமையாக மோதிக்கொண்டதில் ராஜஸ்தான் அணி ரூ. 8.50 கோடிக்குத் தேர்வு செய்தது. 

2020, 2021 ஆண்டுகளில் தில்லி அணிக்காக விளையாடினார் ஹெட்மையர். ஐபிஎல் 2020 போட்டிக்கான ஏலத்தில் அவரை ரூ. 7.75 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. அப்போது ஹெட்மையரைத் தேர்வு செய்ய முயன்று தில்லியிடம் தோற்றது ராஜஸ்தான். இந்த ஏலத்தில் அந்த அணி இன்னும் கொஞ்சம் அதிக தொகையைச் செலுத்தி ஹெட்மையரைத் தேர்வு செய்துகொண்டது. 

ஐபிஎல் 2020 போட்டியில் 12 ஆட்டங்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஹெட்மையர். ஒரு அரை சதமும் இல்லை. ஆனால் 12 சிக்ஸர்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 148.00

ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 242 ரன்கள் எடுத்தார். ஒரு அரை சதம், 12  சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் - 168.05.

ஹெட்மையரை மீண்டும் தேர்வு செய்ய தில்லி ஆசைப்பட்டதற்குக் காரணம் அவருடைய ஸ்டிரைக் ரேட் தான். குறைவாக ரன்கள் எடுத்தாலும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் திறமை ஹெட்மையருக்கு உண்டு. எனினும் ஏலத்தில் ராஜஸ்தானே ஹெட்மையரைத் தேர்வு செய்தது. 

இந்த வருட ஐபிஎல்-லில் ஹெட்மையரின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தானுக்கு மிகவும் உதவியுள்ளது. சன்ரைசர்ஸுக்கு எதிராக 210 ரன்களும் மும்பைக்கு எதிராக 193 ரன்களும் எடுத்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று - ஹெட்மையரின் ஆட்டம். 

ஐபிஎல் 2022 போட்டியில் ஹெட்மையர் 2 ஆட்டங்களில் 67 ரன்கள் எடுத்தாலும் ஸ்டிரைக் ரேட் 248.15 ஆக உள்ளது. 6 சிக்ஸர்கள். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ஸ்டிரைக் ரேட்டை வைத்திருக்கும் வீரர், ஹெட்மையர் தான். 

போட்டி இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் என்னென்ன வேடிக்கைகளைக் காண்பிக்கப் போகிறாரோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com