தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மும்பை இந்தியன்ஸுக்கு மிக மோசமாக அமைந்த ஐபிஎல் 2022 போட்டி!

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு பருவத்தில் 9 தோல்விகளைச் சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

News image
Updated On :10 மே 2022, 8:31 am

DIN

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு பருவத்தில் 9 தோல்விகளைச் சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

நவி மும்பையில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா தலா 43 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பை அணி, 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 51 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக பும்ரா தேர்வானார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது மும்பை அணி. 9 தோல்விகள்.

இதுவரை எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் மும்பை அணி 9 தோல்விகளைக் கண்டதில்லை. 2018, 2014, 2009 ஆகிய ஆண்டுகளில் தலா 8 ஆட்டங்களில் தோற்றுள்ளது. இந்தமுறைதான் முதல்முறையாக 9 தோல்விகள். இதனால் ஐபிஎல் 2022 போட்டி மிக மோசமான அனுபவமாக மும்பைக்கு அமைந்துவிட்டது.

அடுத்த வருடம் ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை அணியில் விளையாடவுள்ளதால் நிலைமை மாறும் என எதிர்பார்க்கலாம்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.