சர்ச்சையை ஏற்படுத்திய ஷ்ரேயர் ஐயரின் பேச்சு

கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய ஷ்ரேயர் ஐயரின் பேச்சு

கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நவி மும்பையில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா தலா 43 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பை அணி, 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 51 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக பும்ரா தேர்வானார்.

நேற்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணியில் 5 வீரர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். இதுபற்றி கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அணியில் பல வீரர்களை மாற்றுவது கடினமான முடிவாக இருக்கும். நானும் ஐபிஎல்-லில் விளையாட ஆரம்பிக்கும்போது அந்த இடத்தில் இருந்தேன். பயிற்சியாளர்களிடம் விவாதிப்போம். தலைமைச் செயல் அதிகாரியும் (வெங்கி மைசூர்) அணித் தேர்வில் பங்களிப்பார். பயிற்சியாளர் மெக்குல்லம், தேர்வாகாத வீரர்களிடம் சென்று நிலைமையை எடுத்துரைப்பார். அணித்தேர்வு குறித்து முடிவெடுப்பதில் அனைவரும் நன்கு ஒத்துழைக்கிறார்கள் என்றார்.

ஓர் ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் பற்றி அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் ஆகியோர் மட்டுமே விவாதித்து ஒரு முடிவை எடுப்பார்கள். தலைமைப் பயிற்சியாளரின் முடிவு பல அணிகளில் அணித்தேர்வை நிர்ணயம் செய்யும். மற்றபடி நிர்வாகிகள் யாரும் அணித்தேர்வில் தலையிட மாட்டார்கள். ஆனால் கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர், அணித் தேர்வில் பங்களிப்பார் என ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதனால் இப்படி நடக்கிறது, இதை ஏன் கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் அனுமதிக்கிறார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com